Aaradhaikulle Kadanthu

ஆராதனைக்குள்ளே கடந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனைக்குள்ளே கடந்து செல்வோம்
ஆராதனை தேவனை உயர்ந்திடுவோம்
ஆராதனை ஆராதனை-2
1.ஜீவனுள்ள தேவனுக்கு ஆராதனை
என் ஜீவிய காலமெல்லாம் ஆராதனை-2
ஜீவாதிபதிக்கு ஆராதனை
ஜீவ தயாபரனுக்கு ஆராதனை-2 – ஆராதனை
2.தூயதி தூயவர்க்கு ஆராதனை
என் கர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை-2
திரியேக தேவனுக்கு ஆராதனை
மகத்துவ ராஜனுக்கு ஆராதனை-2 – ஆராதனை
3.சாரோனின் ரோஜாவுக்கு ஆராதனை
பள்ளத்தாக்கின் லீலிக்கு ஆராதனை -2
படைத்த தேவனுக்கு ஆராதனை
மாறாத நேசருக்கு ஆராதனை-2 – ஆராதனை