Aaraathikka Aaraathikka Lyrics

ஆராதிக்க ஆராதிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது
ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது – 2
நன்றி சொல்ல நன்றி சொல்ல நன்மை பெருகுது – 2
நாளெல்லாம் உம்மை துதிக்க உள்ளம் ஏங்குது -2
உயிரே என் இயேசுவே
நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே – 2
கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே – 2
வானத்தையும் பூமியையும்
உந்தன் வல்லமையால் அழகாய் சிருஷ்டித்தீரே – 2
மாறாத மாணிக்கமே
பகல் எல்லாம் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே – 2
உயிரே என் இயேசுவே
நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே – 2
கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே – 2
கிருபையும் இரக்கமும் ஈவாக தந்தீரே
என்றென்றும் வாழ வைப்பவரே – 2
தூங்கா கண்கள் உடையவர் நீர்தானே
என்றென்றும் பாதுகாப்பவரே – 2
உயிரே என் இயேசுவே
நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே – 2
கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே – 2
உந்தன் வருகைக்கு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்
எப்போது வருவீரையா – 2
ஆத்துமாவும் வாஞ்சிக்குதே உள்ளமும் ஏங்கிடுதே
உம் முகத்தை நானும் பார்க்கனுமே – 2
உயிரே என் இயேசுவே
நாளெல்லாம் நீர்தான் தஞ்சமே – 2
கடைசி வரை கரை சேர்க்கும் கல்வாரி நாயகனே – 2
ஆராதிக்க ஆராதிக்க அனலும் இரங்குது
ஸ்தோத்தரிக்க ஸ்தோத்தரிக்க கிருபை பெருகுது – 2