aapirakamin thevane aaseervathikkum rajane ummai poola yarum illaiye

நீர் முடிவெடுத்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆபிரகாமின் தேவனே ஆசீர்வதிக்கும் ராஜனே உம்மை போல யாரும் இல்லையே
உம் மார்பில் சாய்ந்து விட்டேன் உம்மையே நம்பி உள்ளேன் உம்மைப் போல யாரும் இல்லையே
நீர் முடிவெடுத்தால் யார் மாற்ற கூடுமோ (4)
என் தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக என் மேல் அன்பு வைத்து
தகப்பன் போல் சுமந்தவர் நீரே
( நீர் முடிவெடுத்தால் )
அடிமையாய் போனவனை அதிபதியாக்கினீரே அதிசயமானவர் நீரே
ஆடுகள் மேய்த்தவனை அரசனாய் மாற்றினீரே ஆச்சர்யமானவர் நீரே
( நீர் முடிவெடுத்தால் )
எதிரியின் கண்முன்னே பந்தியை வைத்தவரே யெகோவா தேவனும் நீரே
எண்ணையால் என் தலையை அபிஷேகம் செய்தவரே யெகோவா நிசியும் நீரே
( நீர் முடிவெடுத்தால் )