Aapirakaamin Dhevan eesaakkin Dhevan

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நீரே
உண்மை உள்ளவர் வாக்குத்தத்தம் மாறிடார்
இயேசு ராயன் அவரே
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நீரே
எங்கள் தேவன் அவர் உலகத்தின் இரட்சகர்
மீண்டும் வந்திடுவாரே
அல்லேலூயா ஆடிப்பாடி மகிழுவோம்
அல்லேலூயா உம் நாமம் உயர்த்துவோம்-2
1.தள்ளப்பட்ட நம்மை தேடி வந்த தேவன் அவர்
ஒதுக்கப்பட்ட நம்மை உயர்த்தி விட்ட ராயன் அவர்-2
வெறுமையாய் வாழ்ந்த நம்மை நிரப்பி விட்டாரே
பிரசன்னத்தால் நிரப்பி விட்டாரே-2
-அலேலூயா…
2.ஆசீர்வாதத்தினால் பெருக வைக்கும் தேவன் அவர்
செழிப்பாய் மாற்றி நம்மை மகிழ வைக்கும் ராயன் அவர்-2
துக்கத்தின் நாட்களை முடித்து விட்டாரே
மகிழ்ச்சியால் துவக்கி விட்டாரே-2
-அலேலூயா…
3.கர்த்தர் நல்லவர் என்பதை நான் ருசித்துக் கொண்டேன்
அவரை நம்பியதால் பாக்கியம் பெற்றுக் கொண்டேன்-2
தோல்வி என்பது எனக்கில்லையே(நமக்கில்லையே)
வெற்றி எப்பொழுதுமே(நம்முடையதே)-2
-அலேலூயா
-ஆபிரகாமின்