Aani Konda Um Kayangalai

ஆணி கொண்ட உம் காயங்களை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Roman Catholic Songs collection.

ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மை கொன்றேனே
ஆயரே என்னை மன்னியும்
வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே
இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன் – ஆணி கொண்ட
ஆணி கொண்ட உம் காயங்களை பாடல் வரிகள், Aani konda um kaayangalai Lyrics