aananthame paramananthame enthan – Aananthamae paramanandamae endan

ஆனந்தமே பரமானந்தமே எந்தன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆனந்தமே பரமானந்தமே எந்தன் – Aananthamae paramanandamae endan
ஆனந்தமே பரமானந்தமே எந்தன்
ஆத்தும நேசரின் மெய் அன்பினால்
அவரன்பின் பாதத்தை அனுதினமும் தேடி
கிருபையின் பாதத்தில் பரிவுடன் கூடி
ஆவியினால் நிறைந்தே கவி பாடி
அவருக்கே செலுத்துவோம் துதிகோடி
1.கிறிஸ்துவின் அன்பை அறியாமலே – நான்
கிறிஸ்துவின் நடத்துதல் தெரியாமலே
வானவர் வாக்குகள் அறிந்திடாமல் – நான்
வழிவிலகி தூர போயிருந்தேன் – என்னை
கிருபையின் கரத்தினால் திருப்பினாரே – அவர்
கருணையின் கரங்களில் அணைத்தனரே
2.எண்ணில்லா மீறுதல் என்னிடமிருக்க
மன்னித்தாரே என்னை மாதயவாய்
அன்னையை போலெனக்கன்பளித்தாரே – நான்
என்னத்தை கொடுப்பேன் இயேசுவுக்காய் – மெய்
நன்றியினால் உள்ளம் மகிழ்ந்திடுதே – நான்
என்றுமே அவருக்காய் பிழைத்திடவே
3.உலகம் மாமிசம் ஒன்று கூடி – எந்தன்
உவகையை மாற்றும் வேளையிலே
கலக்கத்தினால் நான் கண்ணீர் விடும் வேளை
கலங்காதே திகையாதே மகளே (மகனே) என்று – தன்
ஆணிக்கடாவின கரங்களினால் – என்
கண்ணீரை துடைத்தாரே அன்புகொண்டு
4.உன்னை நான் அறிவேன்என் மகளே (மகனே) உன்
பெலவீனத்தை நான் அறிந்திடுவேர்
கள்ளனை அறிந்த கர்த்தனேசு நான்
தள்ளவே மாட்டேன் சோர்ந்திடாதே – நீ
உள்ளளவும் அல்லேலூயா பாடி
மகிழ்வாய் மகனே (மகளே) எனத் தேற்றினாரே