aananthakkalipputan pati kontatuvoom

ஆனந்தக்களிப்புடன் பாடி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஆனந்தக்களிப்புடன் பாடி கொண்டாடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
சஞ்சலங்கள தவிப்புகள் ஓடிப்போகுமே
சந்தோஷமும் மகிழ்ச்சியும் சூழ்ந்துகொள்ளுமே
விடிவெள்ளி நட்சத்திரம் கிறிஸ்து இயேசுவே
அந்தகார இருளை நீக்கும் தெய்வமே
எங்கும் எதிலும் ஜெயம் தந்தீரே
பெலனாய் இருந்து நடத்தினீரே
அதிகமாய் விருத்தி அடையச்செய்வார்
ஆச்சர்யமாய் என்னை நடத்தி செல்வார்
அதிகமாய் விருத்தி அடையச்செய்வார்
ஆச்சர்யமாய் நம்மை நடத்தி செல்வார்
நான் கண்ட வெட்கத்திற்கு பதிலாக
இரண்டதனையாய் பலன் தருவார்
நாம் கண்ட வெட்கத்திற்கு பதிலாக
இரண்டதனையாய் பலன் தருவார்
இரண்டதனையாய் பலன் தருவார்
சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்
சிறையிருப்பை எல்லாம் மாற்றிடுவார்
சுகவாழ்வு சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்
சிறையிருப்பை எல்லாம் மாற்றிடுவார்
என் வாழ்வின் சாபங்கள் எல்லாம் நீக்கி
ஆசீர்வாதமாய் என்னை நடத்திடுவார்
உன் வாழ்வின் சாபங்கள் எல்லாம் நீக்கி
ஆசீர்வாதமாய் உன்னை நடத்திடுவார்
ஆசீர்வாதமாய் நம்மை நடத்திடுவார்
பழையவைகளை எல்லாம் ஒழித்திடுவார்
புத்தம் புதியவைகள் தோன்ற செய்வார்
பழையவைகளை எல்லாம் ஒழித்திடுவார்
புத்தம் புதியவைகள் தோன்ற செய்வார்
கண்ணீரை ஆனந்த களிப்பாக்கி
என் வாழ்க்கையில் அவர் உதித்திடுவார்
கண்ணீரை ஆனந்த களிப்பாக்கி
உன் வாழ்க்கையில் அவர் உதித்திடுவார்
நம் வாழ்க்கையில் அவர் உதித்திடுவார்