Aanantha Thuthi Oli ketkum Tamil Christian song lyrics

Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18
My people will live in peaceful dwelling places,
in secure homes,
in undisturbed places of rest. Isaiah 32:18
அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;
This is what the Sovereign Lord, the Holy One of Israel, says:
“In repentance and rest is your salvation,
in quietness and trust is your strength,
SONG LYRIC:
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ…
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…
மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ…
யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…