aanantha kalyana issoopana – Aanantha Kalyana

ஆனந்த கல்யாணா இச்சோபன
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

ஆனந்த கல்யாணா இச்சோபன – Aanantha Kalyana
பல்லவி
ஆனந்த கல்யாணா! இச்சோபனத்
தாசி தந்தாண்டருள் கூர்.
அனுபல்லவி
ஞானந்தரும் ‘சச்சிதானந்தத் தேவனே,
கானக் கலியாணக் கருணைத் திருவடியே
சரணங்கள்
1.’கலியேக அருள் இலங்க, ஐக்யம் கற்பு நிலை துவங்க
மலி நன்மை சுகபெலன் வாய்மை புத்திர பாக்கியம்
நலி துன்பத்தில் பொறுமை நாதனே அளித்திடும்
2. சந்தோஷமே பெருக – இகபர சௌபாக்கியம் வருக
எந்தை நின்பூரண இணையாத அன்புற
சுந்தர ஆவியைச் சொரிந்தே உற்சாகிதமுற