aalaya mani oosai kelungkal varungkal

ஆலய மணி ஓசை கேளுங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஆலய மணி ஓசை கேளுங்கள் வாருங்கள்
ஆண்டவர் அழைக்கின்றார் ஒன்றாய் சேருங்கள் – 2
வாழ்கிறார் ஆண்டவர் நமக்காக
இறை அன்பின் விருந்தில் கலந்திடுவோம் – 2
அவர் அழைப்பை கேட்டு ஒன்றாய்
இணைவோம் புது உயிர் தருவரே
அவர் மகிமை என்றும் பாடி
மகிழ்வோம் சுமைகள் தீர்ப்பாரே
நம் குருவுடன் ஒன்றாய் இணைந்து
திருப்பலி செலுத்துவோம் – 2
ஆலய மணி…
அவர் அன்பில் இணைத்து ஒன்றாய்
வாழ்வோம் நன்மைகள் மலருமே
அவர் கருணை நிழலில் என்றும்
வாழ்வோம் ஆசீர் வழங்குவார்
நம் புனிதர்கள் உறவில் ஒன்றாய் இணைவோம்
திருப்பலி செலுத்துவோம் – 2
ஆலய மணி