Aadhiyum Anthamum Lyrics

ஆதியும் அந்தமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆதியும் அந்தமும் ஆனவரே
அழைக்கிறோம் உம்மை இந்த வேளை
அல்பாவும் ஒமேகா வும்ஆனவரே
வந்தின்று ஆசீர் தந்தருளும்
வந்தருளும் தூய ஆவியே
தந்தருளும் தேவ வல்லமையை
நாமத்தினால் கூடிடும் நேரத்தில்
வருவேன் என்றீரே வாருமையா- என்
உமக்கு பிரியமானதை செய்திட
எனக்கு கற்று தாருமையா
நடந்திட வேண்டிய வழிகளை
காட்டுவேன் என்றீரே காட்டும்மையா
எந்தனின் மேலே உம் கண்களை வைத்து
ஆலோசனை தந்து நடத்துமையா
மாம்சமான யாவரின் மீதிலும்
ஊற்றுவேன் என்றீரே ஊற்றுமையா
பற்பல பாஷைகள் பேசி துதித்திட
கிருபைகள் இன்று தாரும்மையா
அப்போஸ்தலர் கால அற்புத அடையாளம்
சபையினில் இன்று நடக்கணுமே
சாத்தானின் சகல தந்திரம் தகர்க்க
அபிஷேக வல்லமை தந்திடுமே