கேளென் விண்ணப்பத்தை – Keallean Vinnappaththai

கேளென் விண்ணப்பத்தை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
கேளென் விண்ணப்பத்தை
திரியேகா!
அனுபல்லவி
பாவிகளை மீட்கவும்
பேயின் கூரொடிக்கவும்
1. பக்தர்கள் பெருக்கமாய்,
கர்த்தரை உருக்கமாய்
கத்தும் ஆத்ம விண்ணப்பத்தைக்
கேளாயோ? – கேளென்
2. பொய்யன் பேய் சிறைகளாய்
வையகத்தோர் சிக்குண்டு
செய்யும் கர்ம பாதகத்தை
உணர்த்தாயோ? – கேளென்
3. சிற்றின்ப வலைகளில்
சிக்குண்டலைவோர்களை
சற்றே எழுப்பிடீரோ
சருவேசா! – கேளென்
4. இந்த தேசம் சுவாமியின்
சொந்த ஜனமாகவே
வந்து மனமாறல் பெற
இரங்காயோ? – கேளென்
5. ஆவியான ரூபியே!
பாவியைக் கிருபையாய்
சாவின் புண்யத்தாலே
உள்ளம் மாற்றாயோ? – கேளென்
கேளென் விண்ணப்பத்தை பாடல் வரிகள், Keallean Vinnappaththai Lyrics