எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam

எங்கள் விண்ணப்பம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா,
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா ( எங்கள் மன்றாட்டுக்கின்றி இரங்கையா) .
அனுபல்லவி
என்றன் (உந்தன் ) திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை
வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள்
சரணங்கள்
1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன்
ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே;
இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம்
அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள்
2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர்
தந்து ரட்சித்த கோனே, தாங்கையா;
சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள்
சிந்தை திரும்பி ஜீவ பாதையில் சென்றொழுக, – எங்கள்
3. நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்;
மோசம் வராது தின முற்றுமே
தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி,
யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம். – எங்கள்
எங்கள் விண்ணப்பம் பாடல் வரிகள், Engal Vinnappam Lyrics