இத்தனை பெருங் குருசை ஐயா – Iththanai Perum Kurusai Aiyya

இத்தனை பெருங் குருசை ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
இத்தனை பெருங் குருசை ஐயா, நீர்
எடுத்தெப்படி நடப்பீர் துய்யா!
அனுபல்லவி
இத்தரையோர் வினையறச் சத்தமற்ற ஆடதுபோல்
இடறி தாளுந் தத்தளித்து வீழ்ந்திட
எழுந்து பதறியே சடலம் சோர்ந்திட
சரணங்கள்
1. பாதையினிற் கூட்டம் அடர்ந்திடவும்,
கொடியோர் நடத்திவரவும்,
நல்மாதரான சிலர் நாடிப் புலம்பிடவும்
நயமதாகிய தோள்கள் சிவக்கவும்,
நாதா,உமக்குப்பின் சீமோன் சுமக்கவும்,
2.வானா சனத்தினிலே மாறாத நன்மைகளை
மாந்தர் அனுபவித்திட,
ஞானாகரனே, உந்தன் நற்றாள் கரத்தினிலே
நைய ஆணியினா லிறுக்கவும்,
மெய்யில் பாரமாய்ச் சுமையொறுக்கவும்,
3.ஆவியொடுங்கிடவும், அவயவம் நடுங்கிடவும்,
அருள்முகம் வாடிடவும்,
பாவிகளைத் தமது ‘பாரிசமாக்கிடவும்,
பாடுபட வந்த இரக்கவாசனே,
பரமநாதனின் அருமைச்சேயனே,