சிலுவை சுமந்தீர் – Siluvai Sumandheer Enakkaga

சிலுவை சுமந்தீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

பாடல்
சிலுவை சுமந்தீர்
பல்லவி
சிலுவை சுமந்தீர் எனக்காக
சிந்தினீர் இரத்தம் எனக்காக 2
மரித்து உயிர்த்தீர் எனக்காக
மீட்பினைத் தந்தீர் எனக்காக. 2
எனக்காக எல்லாம் எனக்காக
உம்மையேத் தந்தீர் எனக்காக. 2 – சரணம்
1.சௌந்தர்யம் இல்லை , அழகும் இல்லை
விரும்பத்தக்க ரூபமும் இல்லை. 2
பாடுகள் , துக்கங்கள் சுமந்து தீர்த்தீர்
கிரியைகளை முடித்து ஓய்ந்தீர். – 2 – எனக்காக
2.அவமானப்பட்டீர் , நிந்திக்கப்பட்டீர்
சோதிக்கப்பட்டீர் , துக்கப்பட்டீர். 2
என் பாவம் உணர்த்தி வேண்டுதல் செய்தீர்
தழும்புகளால் என்னைக் குணமாக்கினீர். 2எனக்காக ( சிலுவை சுமந்தீர் )