பவனி செல்கிறார் ராசா – Bavani Selgirar Rasa Naam song lyrics

பவனி செல்கிறார் ராசா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.

பல்லவி
பவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அனு பல்லவி
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,- பவனி
சரணங்கள்
1.எருசலேமின் பதியே நரர்
கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே !- பவனி
2.பன்னிரண்டு சீடர் சென்று நின்று
பாங்காய் ஆடைகள் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஒத.- பவனி
3.குருத்தோலைகள் பிடிக்க, பாலர்
கும்பல் கும்பலாக நடக்க,
பெருத்த தொனியாய் ஒசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற. பவனி