ஆவியை நீர் உயிர்ப்பியும் – Aaviyai Neer Uyirpiyum

ஆவியை நீர் உயிர்ப்பியும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
எழுப்புதல் என் தேசத்தில் எழுப்புதல்
என் சபையிலும் ஒரு எழுப்புதல்
நீர் காணச் செய்யுமே
கோரஸ்
உயிர்ப்பியும் என்னை உயிர்ப்பியும்
என் ஆவியை நீர் உயிர்ப்பியும்
உமக்காகவே நான் வாழ்ந்திட என்னை
(அர்ப்பணிக்கின்றேன்)
நான் தருகிறேன்
1. ஊழியம் நான் செய்திடணும்
உமக்காக வாழ்ந்திடணும்
வார்த்தையால் நிறம்பிடணும்
வரங்களை நான் பெற்றிடணும்
2. உயிர் வாழும் நாட்கள் எல்லாம்
உம் நாமம் உயர்த்திடணும்
மாறுரூபம் ஆகிடணும் – நான்
உம்மைப் போல மாறிடணும்
பிரிட்ஜ்
உமக்காக உமக்காக
வாழ்வேன் என்றுமே
உமக்காக உமக்காக
உமக்காகவே