தேவாதி தேவா திரியேக தேவா – Devaathi Devaa Thiriyeaga Devaa song lyrics

தேவாதி தேவா திரியேக தேவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
தேவாதி தேவா திரியேக தேவா!
சரணங்கள்
1. தம்மைத் தாமே ஏழைகட்காய்
தத்தம் செய்த மேசியாவே!
உம் ஆவியை எங்கள் பேரில்
ஊற்றி உயிர்ப்பியுமேன் – தேவாதி
2. நொடி தோறும் தேவரீர்!
அடியாரைக் காக்கிறீர்;
கூடிப் பணிந்தும்மைத் தேட
நாடும் ஆவி தந்திடுமேன் – தேவாதி
3. நன்றி யுற்ற உள்ளத்தோடே
என்றும் உம்மைப் போற்றிட,
உந்தனது கிருபையாலே
எந்த னாத்மம் நிரப்பிடுமேன் – தேவா