ஏழை ஆத்ம நேசனே – Yealai Aathma Neasanae song lyrics

ஏழை ஆத்ம நேசனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

சரணங்கள்
1. ஏழை ஆத்ம நேசனே!
கொந்தளிப் பதிகமே;
புகலிடம் ஐயனே!
வெள்ளங்கள் பெருகுதே
2. நம்பிக்கை யோடிதோ நான்
நீர் இரங்கக் கெஞ்சுகிறேன்;
உம்மைத் தஞ்ச மாகத்தான்
நான் பிடித்திருக்கிறேன்
3. தலை சாய்க்க ஏழை நான்
உம்மைவிட் டெங்கேகுவேன்?
நீரே கதி யாகத்தான்
தெண்டனிட்டேன் கேளுமேன்!
4. எந்தன் முழு நம்பிக்கை
உம்மில் தான் என் ஐயனே!
தஞ்சமென்ற ஏழையை
தாபரியென் சுவாமியே!
5. என்னை என்றும் சுத்தனாய்
உம்மால் வைக்கக் கூடுமே;
இப்போ என்னை முற்றுமாய்
ஆவியால் ஆராயுமேன்
6. வாழ்நாள் ஜீவன் ஆவியும்
இந்த வேளை அடியேன்
மற்றும் எந்தன் யாவையும்
பூசையாய்ப் படைக்கிறேன்