பூமியும் நிறைவும் உலகமும் – Boomiyum Niraivum Ulagamum

பூமியும் நிறைவும் உலகமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பூமியும் நிறைவும் உலகமும் அதிலுள்ள
குடிகளும் கர்த்தருடையது
சரணங்கள்
1.அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தினார்,
அவரே அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
2. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்?
யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?
3.கைகளில் சுத்தமுள்ளவனும் இதயத்தில் மாசில்லாதவனும்
மாயைக்கு ஒப்புக்கொடாமலும் கபடமாய் ஆணையிடாதவனே.
4.அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும் பெறுவான்
தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.