நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar

நித்தம் நித்தம் பரிசுத்தர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே – இவ்வாலயம்
நேயத்துடன் வரும் யாவர்க்கும் உன் அருள் தாவே.
அனுபல்லவி
எத்திசையும் பணி கர்த்தாதி கர்த்தன் நம்
ஏசு கிறிஸ்துவின் நாமத்திற்கே துதி!
சத்ய சுவிசேஷம் எங்கும் பரம்ப
தயை அளித்தாளும் தயாபரனுக்கென்றும்
சர்வாதிகாரம் – மகிமையும் தகும் நமஸ்காரம் பெருகவும்
தத் தித் திமி தத் தித் திமி தனுத்த சேம் தரி
தாம் தரிகிட தளங்கு தோமென.
சரணங்கள்
1.அம்பரம் ஆசனம், பூமியைப் பாதத்தில் கண்டாய் – மிக
அஞ்சிப் பணிந்தோர் இருதயத்தும் குடி கொண்டாய்
இம்பர் பணிந்து நாம் ஏற்ற கிருபையைத் தந்தாய் – எங்கே
இரண்டொரு மூவர் இசைந்தாலும் வருவோம், என்றாய்,
இன்ப முழுக்க தாகும் ஞானஸ்நானம்
எல்லா உலகத்தார்க் கீயும் பிரதானம்;
அன்பர் அடையும் கருணை ராப்போஜனம்
ஆத்துமாவுக்கு நல் ஆறுதலாம் தினம்;
ஆ! உபகாரம் பரா பரன் அளித்தார் இந்நேரம் எங்கட்கெந்த
ஆபத்திலும் சாபத்திலும் அருமையாய், தேவ
கோபத்திலும் யாவற்றிலும் கிருபையாகவே. -நித்தம்
2. எத்தலத்தோர்க்கும் உன் உத்தம வார்த்தையைக் கூறும் சுவி
சேஷ குருமாருக்குக் கிருபை பெலன் தாரும்
சுத்த நற்போதகத்தில் பயிலும் நற்சபையாரும்-மெய்ச்
சுடர் வழி கண்டு நடக்கக் கருணைக் கண் பாரும்
பக்தி, விசுவாசம், நம்பிக்கை எங்களில்
பாலித்தருளும்; எக் காலும்; நிலை நிற்க
முக்தி பெறும் கடை நாள் வரை ஆவி
முத்திரையாக நிதம் புரிந்தாளும்;
மூவர் ஒன்றாய் வந் திவ் வீட்டில் மேவும்;அன்பாய் நின் – நல்வார்த்தை
முற்பட்ட மகத்துவத் தயையால் உளங்கொள
முற்பொற் சிறை நற்பிற் சிறையே வணங்கியே.- நித்தம்