ஆருயிர் நண்பர் நீரே – Aaruyir Nanbar Neerae song lyrics

ஆருயிர் நண்பர் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
ஆருயிர் நண்பர் நீரே
காருண்ய நேசரே
எந்தன் மனமெல்லாம் நிறைந்தவரே
அனுபல்லவி
உயிரினும் மேலாக நேசிக்கும் நண்பர் நீர் உம்
உயிரையே தியாகமாக உவந்து அளித்தீரே
சரணங்கள்
1. பரிந்துபேசி பரிதபித்துருகும் அன்பே
அனாதி ஸ்நேகத்தாலே அரவணைத்திடுவீர்
பதினாயிரங்களிலும் சிறந்த என் நேசரே உம்
ஜீவத் தண்ணீரால் எந்தன் தாகம் தீர்த்தீடுவீர்
2. உமது நேசம் என்னுள்ளில் பொங்கிடுதே
மாறா நேசமன்றோ என்னை வனைந்திடுதே
உமது சமூகம் விட்டு செல்லக் கூடுமோ இனி
உம்மைப் பிரியேனே நீரே எந்தன் தஞ்சமே