பாவி என்னைச் சற்றே கண்பாரும் – Paavi Ennai Sattrae Kan Paarum

பாவி என்னைச் சற்றே கண்பாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
பாவி என்னைச் சற்றே கண்பாரும், ஸ்வாமி
அனுபல்லவி
தேவ திருப் பாலனான ஜீவனின் மன்னாவே,
சிந்தை விசாலா, மனோலா, குணாலா,
தேசுலாவு திவ்ய நேசா, ஏசு சர்வேசா?
சரணங்கள்
1.இந்த லோக வாழ்வை நாடி,என்தன் மனம் வாடுதே;
தந்திரப் பசாசது நிர்ப்பந்தம் உறச் சாடுதே;
இடுக்கண் மிகுதுயர் படுத்துதெனையே;
திடத்த உனதுயிர் விடுத்ததிலையோ?
2.பந்தினம் திரண்டு கூடி, கொந்தளித்துப் பேசுதே,
அந்தியும் சந்தியுமாக நிந்தனைசெய் தேசுதே;
பினும் உடல் அடமொ டெனோடு சமர் இடுதே;
நினைவு தவறிடவும் மனது பதறுதே.
3 ‘பத்துரை மறுத்து பேயின் எத்தினில் போனேனே;
“குத்திரத் துரோகத்தினால் சத்துருவானேனே;
பதைக்க மனமது கொதிக்கு துலகொடு
கதிக்க ‘அலகையும் வதைக்கு தையோ?