நல்ல விசேஷங் கேளுங்கோ – Nalla Vishesan Kealunko

நல்ல விசேஷங் கேளுங்கோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
நல்ல விசேஷங் கேளுங்கோ,ஏசு
நாதன் திரு அவதாரம் செய்த மகா
நல்ல விசேஷங் கேளுங்கோ!
அனுபல்லவி
நல்ல விசேஷம் இதுவாம், உலகில் சமஸ்த
நரர்க்கும் சுரர்க்கும் பரத்தினில்
வல்லமை ‘ஆதி தன் மைந்தனைத் தந்து,
மனிதரை ரட்சிக்க மா அருள் கூர்ந்த இந் -நல்ல
சரணங்கள்
1.சொல்ல முடியாத அன்பிதே,-தம்
தொண்டரைப் போல் பகையாளர் தம்பால் வைத்த-
சொல்ல முடியா அன்பிதே;
அல்லல் அகற்றி அறிவில்லா எங்களின்
ஆத்தும நேசர் குழந்தையாக,
இல்லம் இல்லாமலே ‘காலியின் கொட்டிலிலே
‘நரர் ரூபமதாய்,
எல்லை இல்லாள் தந்தையாக இருக்க மா
ஏழை மனிதர் அனையுடன் தந்தையாய்
தொல்லை அறுக்க என் றிங்கெழுந்தான்;
மகா சூட்சமதாகிய மட்சிமையாம் ஒரு – நல்ல
2. மாந்தர்க்கு நல்ல கால-மாம்;
மரண சாபத்துள் அடைபட்டொடுங்கும்-மாந்தர்க்கு
சாந்தம், பெருமை, சுகுணம் அநேகம்,
சாற்றெளிதாமோ? கிருபைப் பிரவாகம்,
வாய்ந்த நரர் மீதில் அன்பு சொலவென்றால்,
வானவர்க்கும் அரிதே,
சேர்ந்து பணிந்து முழந்தாழ்ப்படி இட்டு,
செப்புவோம்; நம் ஏசு நாதர் பெரும் தயை
ஆய்ந்தவர் சொற்படியே நாம் நடந்திடில்,
அன்பும் அருளும் அனைத்தும் உடன் உண்டாம்;