உலகம் நில்லாது நல்மனதே – Ulagam Nillathu Nalmanathae

உலகம் நில்லாது நல்மனதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
உலகம் நில்லாது, நல்மனதே; நீ கேளு.
அனுபல்லவி
நலம் இலா உலகம்; அகந்தை உண்டீதில்
ஞாயம் இல்லை; நம் இடம் இது அல்ல
சரணங்கள்
1.அக்ரமக்காரர் நிறைந்த முள் காடு;
ஆசூசப் பாவிகள் ஆர் புழுக் கூடு;
துக்க சமுத்திர மான திவ்வீடு;
தொலையாத பேரின்ப வீடதைத் தேடு.
2.வேத விதிப்படி சாதித்து நில்லு;
மேலாம் எருசலை வீட்டிற்குச் செல்லு;
பாதக ஆசா பிசா சத்தைக் கொல்லு;
பரம பொருளை அனுதினம் சொல்லு,
3.நசரேய ராஜன் நவில் மொழி ‘உள்ளு;
ஞானாகரத்தில் அருள் மொண்டுகொள்ளு;
அசலம் அழிவின் வனாந்தரம் தள்ளு;
ஆதி பராபரனால் பாவம் ‘விள்ளு.