சோபன கீதம் பாடுவோம் – Sobana Geetham Paaduvom

சோபன கீதம் பாடுவோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
சோபன கீதம் பாடுவோம்;-சுவிசேஷ மேன்மை
சொல்லிக் களிகொண்டாடுவோம்
அனுபல்லவி
மாபரனான யேசு வந்துற்ப வித்து மாசு
மாறும் நல்வழி தன்னைக் கூறும் விசேஷம்
மன்பதை கதி பெறற் கின்ப சந்தோஷம்
சரணங்கள்
1.சிலுவைக் கொடி விரித்துச் செங்கோ லோச்சி
ஜெயமாய் முடிதரித்து,
அலகைதனைச் சங்கரித்து – ஒரு குடைக்கீழ்
அவனி முழுதும் ‘வரித்து,
கொலுவாய்க்கிறிஸ்திருப்பார் – குவலயமும் ‘புரப்பார்;
கூஷுடன் தீவு தர்ஷீஷெங்கு மிருப்பார்
கொண்டுவந்தே தங்கள் காணிக்கை நிறுப்பார்.
2.மீட்கப்படுவார் பாடி – சீயோனுக்கு
மீண்டு வருவார் கூடி ;
வேட்கையுடனே தேடி, – சத்தமிட்டு
மெசியாவைக் கொண்டாடி,
தாட்களெல்லா மடிப்பார், தாழ்ந்து தலை குனிப்பார்
சாலவுந் துதிகளை நாவினாற் படிப்பார்,
‘சமஸ்தரும் யேசு மத்தியஸ்தரை யடுப்பார்.
சோபன கீதம் பாடுவோம் பாடல் வரிகள், Sobana Geetham Paaduvom lyrics