தேவ அன்பின் ஆழம் – Deva Anbin Aazham song lyrics

தேவ அன்பின் ஆழம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி:-
தேவ அன்பின் ஆழம்,நீளம்,
அகலம்,உயரம் எண்ணியே
நான் உம்மை நேசிக்க கற்றுக் கொடுங்க (2)
நான் கொண்ட அன்புக்கு வானம் எல்லை- ஐயா
நீர் கொண்ட அன்புக்கு எல்லை இல்லை (2)
சரணங்கள்:-
1.தந்தை போல் என்னை
தோளில் சுமக்கிறீர்
தாயைப் போல் என்னை
மார்பில் அணைக்கிறீர் (2)
உறங்காது தூங்காது என்னைக் காக்கிறீர் (2)
உயிராக என்னை நேசிக்கிறீர் (2)- நான்
2.எப்போதும் என் நினைவால் நிறைந்து இருக்கிறீர்
நித்தமும் விரல் பிடித்து நடக்க பழக்கினீர் (2)
உம் அன்புக்கீடாக என்ன தருவேன் (2)
என்னையே தந்திடுவேன்- நான்(2) -தேவ அன்பின்