வந்தேன் கல்வாரி சிலுவை – Vanthean Kalvaari Siluvai

வந்தேன் கல்வாரி சிலுவை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பல்லவி
வந்தேன் கல்வாரி சிலுவையினருகே-எனைத்
தந்தேன் எனக்காய்ப் பிணை நின்றவனே
சரணங்கள்
1.உந்தன் திரு மகிமைத் திறமதையும் விட்டு
ஓடி! உலகில் வந்த விதமதையும்
எந்தன் பாவப் பாரத்தை மனசுடனே-சாமி
ஏற்றுக் கொண்டடென்னை மீட்ட விதமதையும்-கண்டு
2. ஐயோ! பாவத்தின் பலன் பயங்கரமே -அது
ஆகாதென்றதனை விட்டடுத்து வந்தேன்
மெய்யாய் அடியனுமக்காய்ப் பிழைப்பேன்-உந்தன்
மீதாசை வைத்துத் தினம் சுகித்திருப்பேன்-சாமி