கொல்கதா மலையில் – Golgathaa Malaiyil

கொல்கதா மலையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs and Salvation Army Songs collection.

சரணங்கள்
1. கொல்கதா மலையில்
கொலையாட்கள் மத்தியில்
தொய்ந்துயிர் தந்து
ஓய்ந்தெழுந்தனர்!
இயேசு நாயகர்
பல்லவி
ஆமென், ஆமென், ஆமென்
அல்லேலூயா பாடுவோம்;
ஆம் இயேசு சாவின் கூரொடித்து
உயிர்த்தெழுந்தனர்!
2. கொலைஞர் யூதரும்
பகைஞர் ரோமரும்
பதித்த முத்திரை
சிதைத் தெழுந்தனர்!
இயேசு நாயகர் – ஆமென்
3. சாத்தானின் சேனைகள்
பாதாளத்தில் நடுங்க
வேத வாக்குப்
போலெழுந்தனர்!
இயேசு நாயகர் – ஆமென்
4. விண்ணே நீ பாடிடு
மண்ணே நீ செவிகொடு
நித்திய மரணம்
சத்யன் ஜெயித்து
உயிர்த்தெழுந்தனர்! – ஆமென்
பல்லவி
தேவ தாசர் யாவருங் கூடி
கீதம் பாடுவோம்!
பாவநாசர் இயேசுவின் நாமம்
போற்றிப் பாடுவோம்!