கவலைகள் தீர்ப்பார் – kavalaigal Theerpar

கவலைகள் தீர்ப்பார்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
கவலைகள் தீர்ப்பார் கன்மலையின் தேவன்
கருத்துடன் காப்பார் மகிமையின் தேவன்
அனுபல்லவி
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட
சரணம் – 1
பாடுகள் நோவுகள் பஞ்சம் பசியினை
பட்சமாய் நோக்கி பரிவுடன் தீர்ப்பார்
இரட்சகன் இயேசு நாதனே
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட
சரணம் – 2
சோதனைத் துன்பங்கள் வஞ்சம் பகையினை
துச்சமாய் ஆக்கிக் கனிவுடன் காப்பார்
தூயவர் இயேசு இராஜனே
பாடித் துதிப்பேன் பரவசத்துடன்
ஜீவாதிபதி இயேசு சிந்தை மகிழ்ந்திட