மகிழையனே மன மகிழையனே – Magizhaiyane En Magizhaiyane

மகிழையனே மன மகிழையனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

பல்லவி
மகிழையனே மன மகிழையனே
துதி புரியுந்ததி வந்தாள் புண்ணியனே
அனுபல்லவி
வந்தனம் ஸ்வாமி தருதுணைநேமி
மனோகர தினமேவி
சரணங்கள்
1.சீரார் புதிய துங்க வருடமருள் சிங்கனென மாமனுவேலா
திவ்யகுணாளா மரியாள் பாலா – ஜெகாதிபா நடத்தன்பா
2. ‘தாதை தணிய விண்டு தவணை பல தண்டு மருளாசன ராஜா
சற்குண வாசா தவறா ஈசா தயாபரா சரணன்பா
3. நாதா கனிகள் மல்க புனித ஆவி நல்கும் பரிபாலன் நேயா
நல்ல சகாயா தனை பாராயோ நராதிபா அருளன்பா