ஆர்ப்பரித்துப் பாடுவோமே – Arparithu Paaduvomae

ஆர்ப்பரித்துப் பாடுவோமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

பாடல்
பல்லவி
ஆர்ப்பரித்து பாடுவோமே
அகமகிழ்ந்துத் துதிப்போமே
மரணத்தை ஜெயித்தாரே , யூத ராஜா!
உயிரோடு எழுந்தாரே , கிறிஸ்து இயேசு ! 2
அல்லேலூயா , அல்லேலூயா,அல்லேலூயா,அல்லேலூயா 2
சரணம்
1.நித்திரையடைந்தோரில் , முதற்பலன் அவரே
நம்மை உயிர்ப்பிக்கும் ,ஆவியும் அவரே 2
ஆதாமுக்குள் மரிப்பது போலவே
கிறிஸ்துவுக்குள் உயிர்ப் பெறுவோமே 2 ( ஆர்ப்பரித்துப் )
2.கிறிஸ்துவை நம்பினால் , மரித்தாலும் பிழைப்போமே
உயிர்த்தெழுதலும் , ஜீவனும் அவரே 2
வானமும் பூமியும் ஆளும் தேவன்
என்றென்றும் நிலைத்திருப்பாரே 2 ( ஆர்ப்பரித்துப் பாடுவோமே)