Yutha Thennaattin chinnachiru christmas song lyrics

யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

யூதா தென்னாட்டின் சின்னஞ்சிறு நகரே
எங்கள் மன்னன் உந்தன் பூமடியில்
நாடும் இடையர்க்கு விளங்கும் ஓவியமாய்
தந்தை சிந்தை வடிவாய் தோன்றியே
தூங்கும் பாலா உந்தனையே தூக்கி எங்கும் சுமந்திடவே என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2
இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோ
இவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்
இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே
இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான்
பொற்தள வீதி பளிங்குக்கல் மாளிகை
சொர்கபுரிக்கே சொந்தக்காரனே
பனி பெய்யும் நாளில் பெத்தலை வீதியில்
நாதியில்லா நாசத்தைப்போல்
சத்திரங்கள் மறுத்ததே இல்ல கதவுகள் ஒன்றும் திறக்கலையே என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2
இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோ
இவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்
இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே
இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான்
பாராளும் வேந்தனே பரமபிஷேகனே
அண்டம் யாவும் உந்தன் கைகளிலே
சேவைக்கென்றால் ஆயிரம் தூதர் கூட்டம் கொண்டிருந்தும்
இடையர் கூட்டம் மஞ்சம் முன்னணை
உம்மைப்போல மாறிட வீண் பெருமைகளை துரத்திட
என்னுள் வந்து வாசம் செய்வாயோ – 2
இவர்தான் ஆதி பிதாவின் செல்ல பிள்ளை அல்லோ
இவர்தான் அனுகூலமான துணையும் ஆனவரும்
இவர்தான் அபிஷேகம் தந்து நமக்குள் வாழ்பவரே
இவர்தான் ராஜாவுக்கெல்லாம் ராஜாதி ராஜன் – இவர்தான் -2