Yesuvin Naamathai Potriduvom

இயேசுவின் நாமத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்
1. கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்
2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்
3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்
இயேசுவின் நாமத்தை பாடல் வரிகள், Yesuvin Naamathai Potriduvom lyrics