vitiyarkalai oli pool nee piranthaye

விடியற்காலை ஒளி போல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விடியற்காலை ஒளி போல் நீ பிறந்தாயே.
எம் வாழ்வில் புது விடியல் தந்தாயே.
விடியற்காலை ஒளி போல் நீ பிறந்தாயே.
எம் வாழ்வில் புது விடியல் தந்தாயே.
விண்ணகமும் மண்ணகமும் ஒன்றாய் இணைந்தது போல.
என் மனமும் உன் மனமும் உறவில் இணைந்திட வேண்டும்.
புது வாழ்வாய் நீ என்னில் இணைந்தாயே.
[Chorus]
வாராய் என்னுள்ளில் உயிராய் உணர்வாய் பாலா
தாராய் என் நெஞ்சில் மகிழ்வினை என்றும் நிறைவாய்
நீயாக நான் மாறவா
[Verse 1]
கனிந்த இதயம் கருணை உள்ளம்.
என்னில் நிறைவாய் நிலைக்க வருவாய்.
ஏழை மனங்கள் எளிய குடில்கள்.
ஏற்போம் உம்மை இயேசு பாலா.
அன்பின் வரமாய் அள்ளிக்கொள்வேன் உன்னை.
கண்ணின் மணியாய் காப்பாய் நாளும் என்னை.
அன்பின் வரமாய் அள்ளிக்கொள்வேன் உன்னை.
கண்ணின் மணியாய் காப்பாய் நாளும் என்னை.
புது வாழ்வாய் நீ என்னில் இணைந்தாயே.
[Verse 2]
பார்கழி குளிரில் மரியின் மடியில்.
அழலை மொழியில் பேசும் மன்னா.
பாரில் எங்கும் அமைதி நிலவ.
பாசமாய் என்னில் வந்தாயே.
மண்ணின் ஒளியாய் இறையே உலகில் வந்தாய்.
விண்ணின் வழியின் நிறைவை என்னில் தந்தாய்.
மண்ணின் ஒளியாய் இறையே உலகில் வந்தாய்.
விண்ணின் வழியின் நிறைவை என்னில் தந்தாய்.
புது வாழ்வாய் நீ என்னில் இணைந்தாயே.