vinnil vinmeen thoonra

விண்ணில் விண்மீன் தோன்ற
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணில் விண்மீன் தோன்ற
மண்ணில் மனு உருவானார்
மானிடர் பாவம் போக்க
மாட்டுத்தொழுவில் பிறந்தார்-2
பிறந்தார் பிறந்தார் பாலகனாய் பிறந்தார்
உதித்தார் உதித்தார் உன்னதராய் உதித்தார்
1.கல்மனம் கரைந்து கனிவு சுரக்கவும்
பழமைகள் மறைந்து புதுமைகள் நிறையவும்
பிரிவுகள் களைந்து உறவுகள் மலரவும்
அநீதி அழிந்து நீதி துறக்கவும்
மண்ணில் மனிதராய் அவதரித்தாரே
மாபரன் அவதரித்தாரே-2-பிறந்தார்
2.பகைமை ஒழிந்து பாசம் பிறக்கவும்
பொய்மை மடிந்து வாய்மை உயிர்க்கவும்
வேற்றுமை களைந்து ஒற்றுமை ஒங்கவும்
தீமைகள் மறைந்து நன்மைகள் சிறக்கவும்
மண்ணில் மனிதராய் அவதரித்தாரே
மாபரன் அவதரித்தாரே-2-பிறந்தார்