vinnil irunthu mannan vanthare

விண்ணில் இருந்து மன்னன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணில் இருந்து மன்னன் வந்தாரே
மண்ணின் மனிதர்களை மீட்க வந்தாரே -2
ஐயா அம்மா கேளுங்க
இயேசுவை வந்து பாருங்க மகிழ்ச்சியாலே நிரம்பி வழியுங்க
அன்னே அக்கா கேளுங்க
இயேசுவை வந்து பாருங்க மகிழ்ச்சியாலே நிரம்பி வழியுங்க -2
1) பாவியான நம்மேல் பாசம் வைத்தரே
பரிசுத்த வாழ்வு வாழ வாழ்வை தந்தாரே -2
சேற்றில் இருந்த நம்மை எல்லாம் தூக்கி எடுத்தரே
கன்மலைமேல் உயர்த்தி அழகு பார்த்தாரே -2
2) சொந்தம் இல்லா நமக்கு சொந்தமானரே
தனக்கு சொந்தமான பூமியிலே வந்துதித்தாரே -2
சொந்தமாக்கிட நமக்கு தோள் கொடுத்தாரே
சொந்தமான வாழ்க்கைய மாற்றி தந்தாரே -2
3) மறக்கப்பட்ட நம்மை மனசில் வச்சாரே
மறவாமல் நமக்கு கரம் கொடுத்தாரே – 2
சமாதான பிரபுவாக இயேசு வந்தாரே
சாத்தான காலின் கீழே நசுக்கி போட்டரே – 2