Vinnai Vittu Mannil Vantha Lyrics

Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

விண்ணை விட்டு மண்ணில் வந்த
ஏழை குழந்தை என் இயேசு
நம் பாவம் போக்க நம் பலி நீக்க
மண்ணுக்கு வந்தவர் என் இயேசு
தூதர்கள் வாழ்த்த
மேய்ப்பர்கள் மகிழ
மந்தைகள் நடுவில் பிறந்தாரே
சாஸ்திரிகள் தேட
ராஜாவும் கலங்க
தேவகுமாரன் பிறந்தாரே
1. உலக தோற்றம் ஆகும் முன்பே
பிதாவினோதிவர் இருந்தாரே
வார்த்தையாகி மாம்சமாகி
பிள்ளையாய் இன்று பிறந்தாரே
உலகிற்கே வந்த ரட்சிப்பு இவர் தான்
உலகிற்காய் வந்த ரட்சகர் இவர் தான்
உலகி மீட்கும் ரட்சணியம் இவர் தான்
பாவ இருளை நீக்க வந்த
மெய்யான ஒளி இவர் தான்
பாவ இருளை நீக்க வந்த
மெய்யான ஒளி இவர் தான்
சந்தோஷ கொண்டாட்டமே
தேவன் மானிடனாக வந்ததாலே
அல்லேலூயா சொல்லி
பாடுங்கள் தேவன்
மானிடரை ரட்சித்ததாலே (2)
2. உலகம் போற்றும் உலகம் வாழ்த்தும்
தேவ குமரன் இவர்தானே
உலகம் எல்லாம் சந்தோசத்துடன்
கொண்டாடும் திருநாள் இது தானே
எங்களுக்காய் அவர் பூமிக்கு வந்தார்
எங்களுக்காய் அவர் பாவங்கள் சுமந்தார்
எங்களுக்காய் அவர் மரணத்தை ஜெயித்தார்
பாவ இருளை நீக்க வந்த
மெய்யான ஒளி இவர் தான்
பாவ இருளை நீக்க வந்த
மெய்யான ஒளி இவர் தான்
சந்தோஷ கொண்டாட்டமே
தேவன் மானிடனாக வந்ததாலே
அல்லேலூயா சொல்லி
பாடுங்கள் தேவன்
மானிடரை ரட்சித்ததாலே (2 )
ஹாப்பி கிறிஸ்துமஸ் மேரி கிறிஸ்துமஸ்
ஹாப்பி ஹாப்பி
கிறிஸ்துமஸ் சொல்லுங்கள்
நீங்கள் மற்றவரை
வாழ்த்தி கொள்ளுங்கள்
மேரி மேரி கிறிஸ்துமஸ் சொல்லுங்கள்
நீங்கள் யேசுவுக்காய்
வாழ்ந்து கொள்ளுங்கள்