Vinnaga Raja christmas song lyrics

விண்ணக ராஜா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அல்லேலூயா அல்லேலூயா
பாலன் பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
ராஜன் பிறந்தாரே
விண்ணக ராஜா
மண்ணுலகம் வந்தீரே – மானிடனாய்
மனுக்கோலம் எடுத்தீரே
ஆரிரரோ ஆரிர ராராரோ
அல்லேலூயா (2)
(1) காரிருள் நேரத்திலே
விடிவெள்ளி தோன்றியதே – 2
மேய்ப்பர் விரைந்து
பாலகனை பணிந்தனரே – 2 – விண்ணக
(2) மாட்டடைக் கொட்டினிலே
தேவமைந்தனாய் வந்தாரே – 2
மேன்மை வெறுத்து
தாழ்மையினைத் தரித்தாரே – 2 – விண்ணக
(3) வான்புவி சிருஷ்டிகளும்
உம்மண்டை வந்தனரே – 2
பாலனாக இவ்வுலகம்
வந்தீரே – 2 – விண்ணக