Vidiyalin Keethangal isaithidavae song lyrics

விடியலின் கீதங்கள் இசைத்திடவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

விடியலின் கீதங்கள் இசைத்திடவே
விரைவோம் இறை மக்களே
இதயத்தில் இறைவனை வரவேற்க
இணைந்திடுவோம் ஒரு மனதுடனே
மண்ணகம் வந்த விண்ணக தேவன்
அழைக்கின்றார் அழைக்கின்றார்
1.அமைதியின் அரசனவர்
அருளினை பொழிகிறவர்
ஆற்றல் மிகுந்தவரே
ஆதியில் வார்த்தை ஆனவரே
அழைக்கிறார் அன்பு மாந்தரே
அனைவரும் ஒன்று கூடுவோம்
2.இரக்கத்தின் அரசரவர்
இறைவனின் புதல்வரவர்
வான் மழை பொழிபவரே
வாழ்வின் ஊற்றாய் ஆனவரே
அழைக்கிறார் அன்பு மாந்தரே
அனைவரும் ஒன்று கூடுவோம்