Verse 1

மேய்ப்பர்கள் பாட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Verse 1
மேசியா என் மணவாளரே, பாவத்தை போக்கிட வந்தீரே
சாபத்தை நீக்கியே ஜீவன் தந்தீரே
இழந்த அனைத்தையும் மீட்டீடவே
இரட்சிப்பின் வஸ்திரம் தரிக்கவே
என் பாவத்தை நீக்கிட
நீர் வந்தீரே
Pre-Chorus
உம்மை பாடி நான் போற்றுவேன்
உம்மை என்றென்றும் உயர்த்துவேன்
Chorus
மேய்ப்பர்கள் பாட, சாஸ்திரிகள் போற்ற
தேவ குமாரன் பிறந்தாரே
கைகளை உயர்த்தி, கெம்பீரத்தோடே
உந்தனின் நாமம் போற்றுவேன்
யூத ராஜ சிங்கமே
என்னை மீட்க வந்தீரே
Verse 2
கிருபையினால் என்னை அணைத்தீரே
நித்திய வாழ்வினை தந்தீரே
புதிய பலத்தினால் என்னை நிறைத்தீரே
உம் கிருபை ஒன்றே போதும்
என் குறைகளெல்லாம் மாறுமே
இவ்வுலகின் இரட்சகராய் நீர் வந்தீரே
Pre-Chorus
உம்மை பாடி நான் போற்றுவேன்
உம்மை என்றென்றும் உயர்த்துவேன்
Chorus
மேய்ப்பர்கள் பாட, சாஸ்திரிகள் போற்ற
தேவ குமாரன் பிறந்தாரே
கைகளை உயர்த்தி, கெம்பீரத்தோடே
உந்தனின் நாமம் போற்றுவேன் ×2
யூத ராஜ சிங்கமே
என்னை மீட்க வந்தீரே
Bridge
என் மீட்பரே, இரட்சகரே, பரிசுத்தரே
உம்மை பாடுவேன் பாடுவேன் என்றென்றும்
நித்தியரே, நீர் வல்லவரே, தூயரே
உம்மை உயர்த்துவேன் உயர்த்துவேன் என்றென்றும்