vannaththerinil vinnaka rajan

வண்ணத்தேரினில் விண்ணக ராஜன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வண்ணத்தேரினில் விண்ணக ராஜன்
பவனி வருகிறார் நல்ல உள்ளத்தை தேடி
வான் புகழோடு கண்மணி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்
வான்புகழோடு கண்மணி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்.
உள்ளமென்னும் ஆலயத்தில் உறைய வருகிறார்
ஆசை என்னும் மனிதன் நெஞ்சை அடைய வருகிறார்(2)
அவனியிலே தீபமாய் அருவின் வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே(2) – வான் புகழோடு
மலர்கள் மனக்கும் நருமனமாய் மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ வருகிறார்(2)
வானத்திலே தென்றலாய் வளர்ந்து வரும் திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே (2) – வான் புகழோடு