vanaththil vinmeen oonru

வானத்தில் விண்மீன் ஓன்று
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானத்தில் விண்மீன் ஓன்று
கீழக்கில் தோன்றியது
ஞானியர் மூவர் பெத்லேகேம் செல்ல
பாதை காட்டியது
வாரீர் வாரீர் இயேசுப் பாலனைக்
காண்போம் வாரீர்
பாரீர் பாரீர் தேவப்பாலனைப்
புல் மேடையில்
மேசியா இயேசு பிறந்தாரே
மேன்மைகளை விட்டு வந்தாரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே
விண்ணை விட்டு மண்ணில் வந்தாரே
நம்மை மீட்க பூவில் வந்தவர்க்கு
நம் உள்ளத்தை நாமும் தந்திடுவோம்
மா ஏழைக் கோலம் எடுத்தாரே
மாந்தரின் பாவம் போக்கினாரே
வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
வந்தவரின் வழியில் நடப்போம்
வானத்தில் விண்மீன் ஓன்று பாடல் வரிகள், Vaanathil Vinmeen ontru Lyrics