vanam vittirangki vanthavar

வானம் விட்டிறங்கி வந்தவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானம் விட்டிறங்கி வந்தவர்
மனிதனாய் பிறந்தவர்
என் பாவமெல்லாம் தன்மேல் ஏற்றவர்
இம்மானுவேலே தேவன்
நம்மோடிருக்கின்றார்
நம்மை மீட்க தம்மைத் தந்தவர் -2
1.தமது ஜனத்தை பத்திரமாக இரட்சிக்க வந்தவரே-2
சாத்தானின் கிரியைகள் அழிக்க வந்த
மெய்யான கிறஸ்தேசுவே-2- இம்மானுவேலே
2.மேய்ப்பர்கள் மத்தியில் சந்தோஷ செய்தியை
தூதர்கள் கொண்டு வந்தாரே-2
துக்கங்கள் நீக்கி ஒன்றாக கூடி
தேவனைப் பணிந்திட்டார்கள்-2- இம்மானுவேலே