vanam poomiyum makizhum neram

வானம் பூமியும் மகிழும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானம் பூமியும் மகிழும் நேரம்
கானம் பாடிட எண்ணிடுதே
பாரில் பூமழை பொழியும் காலம்
பாவம் போக்கிட உதித்தாரே
வானதூதர் வாழ்த்த நம் பாலன் தோன்றினார். அவரைப் போற்றி வாழ்த்தி பாடி மகிழ்வோம்.
சத்தியவான்…. தந்தையவர்…
பேரமைதி… தருபவர்…
நித்தியரவர்,
நீதியுள்ளவர்
நித்தம் நம்மில் வாசம் செய்பவர்.
வானம் பூமியும் மகிழும் நேரம் கானம் பாடிட எண்ணிடுதே பாரில் பூமழை பொழியும் காலம் இரட்சகர் பிறந்தார்.
(1) உன்னதத்தில் மகிமையும்
பூமியிலே அமைதியும்
மனிதரில் நன்மையுமே
என்றென்றுமே உண்டாகட்டும். (2) சத்தியவான்
தெய்வீகமே ஆதாரமாய்,
மெய்ஞானமே, மாஜோதியாய்,
மீட்பரவர், மாறாதவர், மண்ணில் வந்த தாயானவர். (2) சத்தியவான்