Vanagamae Mazhilvai Christmas song lyrics

வானகமே மகிழ்வாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

வானகமே மகிழ்வாய்
மாபரன் பிறந்ததினால்
பண்ணிசை முழக்கிடும் விண்
சுடரொளி வந்ததினால்
வானவர் இசை பாட
ஆயர்கள் உனை வணங்க
வாழ்வாய் வழியாய் ஒளியாய்
தவழ்ந்தாய் புவியில் மனுவாய்
சின்ன இரு விழி விரிப்பில்
விண்ணகமே மின்னும்
சிவந்த மலர் இதழ் சிரிப்பில்
கோடி எழில் சிந்தும்
வாய் உதிர்க்கும் மழலையில் நம்
வாழ்வின் பொருள் பிறக்கும்
விண்ணகத்தில் உயர் மகிமை
பூவில் சமாதானம்
சிந்தை காவேரி மகிழ் செய்தி
கொண்டு வந்தார் வானோர்
காலமெல்லாம் எதிர் பார்த்த
மாமன்னன் பிறந்துள்ளார்
காத்திருந்த கண்களுக்கு
விடிந்தது புது வாழ்வு
காரிருளில் விளக்காகும்
கடவுள் அவன் வரவு
வார்த்தை மனு உருவாகி
தவழ்ந்தது நம்மிடையில்