vaandhevan mannil vandha neram

வான்தேவன் மண்ணில் வந்த நேரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

வான்தேவன் மண்ணில் வந்த நேரம்
வான் எங்கும் திரு விழா கோலமே-2
புவி மாந்தர் புனிதம் காண
மனு மகனும் மனிதமானார்-2
திரு மறையினில் மானுடர் நிறையவே-2-வான்தேவன்
1.காக்கும் தெய்வம் இங்கே
ஆட்டு குடிலில் மீதிலே
தூதர் பாடல்களிலே
தூங்கு என் தேவனே-2
புல்வெளி மீது பனித்துளி போல
கறைகள் இல்லாத உள்ளம்-2
தேன் சிந்தும் மலர் போல
உம் பாசம் நிறைந்திடும்
குழைந்தை வடிவானதே
உலகின் மீட்பானதே-2-வான்தேவன்
2.ஜாதி பேதம் இல்ல
சாய்ந்து சமமாகுமே
வன்மம் இல்லாதொரு நல்
வாழ்வு நமதாகுமே-2
பசிப்பிணிகள் தரும் பஞ்சம்
இனிமேல் வாழ்வின் இல்லாது போகும் -2
புது மனிதம் புவி காண
மனமெல்லாம் மகிழ்ந்திடும்
அடிமை நிலைமாறுமே
அன்பு நிலையாகுமே