unais rusikka (suvaikka )

உனைச் ருசிக்க
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

உனைச் ருசிக்க (சுவைக்க )
நானே மனம் இசைந்தேன்
உனில் கரைந்து நானும்
மனம் மகிழ்ந்தேன்
எனில் வசிக்க இன்று
உனை அழைத்தேன்
உனைத் தொடர்ந்து வாழ
எனை அளித்தேன் !
வான் வாழும் தேவனே
மனுவாகிறாய்
உன்னையே ஈந்திங்கு
உணவாகிறாய்
முன்னணையின் முல்லையே
புல்லணையின் செல்லமே
விண்ணகத்தின் மைந்தனே
அன்னை மரி அன்பனே
சின்ன பாலனே வா
என்னில் வாழ்ந்திட வா
எந்தன் ஆயனே வா
என்னில் மாற்றங்கள் தா
1.தீவனத் தொட்டியில் தீவனமாய்
ஆடுகள் நடுவே ஆயனுமாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !
கால்நடை மத்தியில் மானிடனாய்
மாமரி அன்னையின் மாதவமாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !
இம்மானுவேலாய் பிறந்தவரே
என்னுள்ளே வாழ்ந்திட வருவீரே !
உணவாய் உறவாய் உயிராய் நிலையாய்
என்னில் கலந்திட வா வா .
2.தேடிடும் மாந்தரின் ஆறுதலாய்
தேவனே காட்டிய மாறுதலாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !
காரிருள் நாட்டின் பேரொளியாய்
மானுட வாழ்வின் பேரருளாய்
பாலனே புவியில் பிறந்தீரே எனக்காக !
ஏழ்மையின் வடிவாய் பிறந்தவரே
மேன்மையின் வாழ்வை அளிப்பீரே
விழியாய் மொழியாய் எழிலாய் நிழலாய்
-என்னில் நிரம்பிட வா வா