thoora oru kiramaththil

தூர ஒரு கிராமத்தில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தூர ஒரு கிராமத்தில்
மாட்டுத் தொழுவத்தில் கன்னி மடியினில் தேவபாலன் தோன்றினார்
இந்த விந்தையை எங்கும் கூறுவோம் இயேசு நமக்காய் பிறந்திட்டார்
இந்த விந்தையை எங்கும் போற்றுவோம் இயேசு நமக்காய் தோன்றினார்
தூர (தூர)
ஒரு கிராமத்தில் (ஒரு கிராமத்தில்) தேவன் மனிதனாய் தோன்றினார்
ஏழை எளிய மேய்ப்பர்களின்
பல நாள் ஏக்கம் நீங்கிற்றே
தமக்கும் தம் சந்ததிக்கும் வரப்போகும் மேன்மையை எண்ணியே விரைந்தே பெத்லகேம் வந்தனர் விந்தை பாலனைப் பணிந்தனர் ஆனந்தம் ஆட்டம் பாடலுடன் ஆண்டவர் பிறப்பைக் கூறினர்.
ஆனந்தம் ஆட்டம் பாடலுடன் ஆண்டவர் பிறப்பை கொண்டாடினர்
பல நாள் விண்ணை ஆராய்ந்து சாஸ்திரிகள் பாலைவனங்களை கடந்து வந்து ஒட்டகத்தில் பொன் பொருளுடன் எருசலேம் நோக்கி வந்தனர்
பாதை தவறி குழம்பினர்
நட்சத்ரம் மீண்டும் தொடர்ந்தனர் பெத்லகேம் அடைந்து பாலனை தரிசித்துப் பரவசம் அடைந்தனர் பெத்லகேம் அடைந்து பாலனை தரிசித்து திருப்தியாய் திரும்பினர்
தூர தனிமையில் நிற்கும் நண்பனே விரைந்து இங்கு ஓடி வா
என்னுடன் சேர்ந்து போகவா
அவரை இங்கு தரிசித்திடுவோம் அன்பும் ஆர்வமும் பெற்றிடுவோம் தூதர் சேனையோடு சேர்ந்து நாம் துன்பம் மறந்து ஆர்ப்பரிப்போம்
உன்னதத்தில் ஹோசன்னா
பூமியிலே சமாதானம் மனுஷரில் பிரியம் உண்டாகட்டும் மனுஷரில் பிரியம் உண்டாகட்டும்
Thoora Oru Kiramaththil Lyrics in English