thoongku mannava theyva palaka

தூங்கு மன்னவா தெய்வ பாலகா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

தூங்கு மன்னவா தெய்வ பாலகா
மண்ணில் வந்தவா விண்ணின் கோமகா -2
கண்ணே மணியே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ
கருணை வடிவே நீயுறங்கு
ஆராரோ ஆரிரரோ
விண்ணைத் துறந்தாயோ
மண்ணில் வந்தாயோ – எம்
குறைகள் போக்கவே
குடிலைத் தெரிந்தாயோ – 2
குளிரிலும் பனியிலும்
அழுது அயர்ந்தாயோ – 2
புதிய வானமும்
புதிய வையமும்
படைக்க வந்தாயோ -எமை
மீட்கப் பிறந்தாயோ – 2
கண்மணியே பொன்மலரே
கர்த்தனே துயிலாயோ – 2